ஆஸ்திரேலிய ஓபனில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் இத்தாலியின் 22 வயதான ஜானிக் சின்னர்.
ஆஸ்திரேலியா ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி மெல்போர்ன் பூங்காவில் இன்று (ஜனவரி 28) நடைபெற்றது.
இதில் அரையிறுதியில் உலகின் முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்திய இத்தாலியின் ஜானிக் சின்னரும், ஜெர்மனியின் செவ்ரேவை வீழ்த்திய ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவும் மோதினர்.
இதில் முதல் இரண்டு செட்டில் 3-6, 3-6, தோல்வி கண்ட சின்னர், அடுத்த இரண்டு செட்களை 6-4, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இருவரும் போராடிய நிலையில், ஆதிக்கம் செலுத்திய சின்னர் 6-3 என்ற கணக்கில் அதிரடியாக வென்றார்.
https://twitter.com/AustralianOpen/status/1751586092132765781
மூன்று மணி நேரம் 44 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 3-2 என்ற கணக்கில் இறுதிப்போட்டியை தன்வசப்படுத்திய 22 வது வயதான ஜானிக் சின்னர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஒரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் முதல் இரண்டு செட்களை இழந்த பின் போட்டியை வென்ற எட்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார் சின்னர்.
மறுபுறம் 2021, 2022 ஆண்டுகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தோற்ற வீரர் என்ற சோகமான சாதனையை படைத்துள்ளார் மெத்வதேவ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஸ்டார் பட அப்டேட்: கவினின் ‘ஜிமிக்கி’ இவர்தான்!
”இந்த பலம் போதுமா?”: ஆஸ்திரேலிய வீரரின் ஆணவத்திற்கு… தக்க பதிலடி கொடுத்த கேப்டன்