INDvsAUS : 10 ஆண்டுகளுக்கு பிறகு அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிராக இன்று (மார்ச் 19) நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை அடுத்து இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரு அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர். ஒய்.எஸ்.ஆர். மைதானத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி 31 ரன்களும், அக்சர் பட்டேல் 29 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிச்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா தொடக்கவீரர்கள் டிரவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய இருவரும் பவுண்டரி சிக்சர்களாக விளாசி அரைசதம் கடந்தனர்.

தொடர்ந்து இருவரும் வாணவேடிக்கை காட்டிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களிலேயே 121 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டியது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் டிரவிஸ் ஹெட் (51) மற்றும் மிட்செல் மார்ஷ் (66) ரன்கள் குவித்த நிலையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை அஸ்திரேலியா பதிவு செய்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 9.2 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது ஆஸ்திரேலியா.

அதன்பிறகு தற்போது விக்கெட் இழப்பின்றி 11வது ஓவரில் வெற்றி பெற்றதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த அணி மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இதனையடுத்து இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

2 தேர்வு எழுதாத மாணவர்கள் : அமைச்சர் புதுவிளக்கம்!

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.