முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியாவை 263 ரன்களுக்கு ஆல் ஆவுட் செய்த இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 9 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடரில் விளையாடி வருகிறது.
நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
அதனால் 1-0 என்ற கணக்கில் தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று (பிப்ரவரி 17) தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
முதல் டெஸ்டில் பலத்த அடி வாங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் தொடக்க வீரர் வார்னரை 15 ரன்களில் வெளியேற்றினார் முகமது ஷமி.

அதனைத் தொடந்து ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான லபுசேன்(18) மற்றும் ஸ்டீவன் சுமித்(0) ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
அதன்பின்னர் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் சரிந்தன. எனினும் பொறுப்புடன் ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா(81) மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்(72*) ஜோடி அணி நல்ல ஸ்கோர் பெற உதவினர்.

முதல் இன்னிங்ஸ் முடிவில் 263 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா அணி. இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்னுடனும், கே.எல் ராகுல் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியை விட ஆஸ்திரேலியா 242 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
வாய்ப்பு தந்த இயக்குநர்: ஓரங்கட்டும் மாதவன்