சிறப்பான பந்து வீச்சு: மனம் திறந்த நாதன் லயன்

விளையாட்டு

ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. கடந்த மார்ச் 1ஆம்தேதி துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று ( மார்ச் 3 ) 9விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இரண்டாவது இன்னிங்ஸில் தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இப்படி இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கும் அவர் வித்திட்டார்.

முதல் இரண்டு போட்டிகளில் அந்த அணியின் செயல்பாடு சற்று சுமாராக இருந்தாலும் இந்த மூன்றாவது போட்டியில் முழுக்க முழுக்க இந்திய அணிக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்திய ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவுசெய்தது.

வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக நாதன் லயன் திகழ்ந்தார் என்பதனாலே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய நாதன் லயன் கூறுகையில் : இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எங்களுக்கு ஒரு குறிப்பிட வேண்டிய தொடராக மாறியுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த பிறகு இந்த போட்டியில் ஒரு அணியாக மீண்டும் வந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.

மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியதும் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பான பேட்டிங்ககாய் வெளிப்படுத்தி வெற்றியை பெற்று தந்துள்ளனர்.

இந்த போட்டியில் எனது சிறப்பான பந்து வீச்சுக்காக நான் எந்த ஒரு மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை எப்பொழுதுமே நான் என்னுடைய பந்துவீச்சின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.

அப்படி நம்பிக்கை வைத்து பந்து வீசியதாலயே இந்த போட்டியில் எனக்கு விக்கெட்டுகளும் கிடைத்தது.

நாம் நமது சிறப்பான பந்துவீச்சை உலக தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக வெளிப்படுத்தும்போது உண்மையிலேயே அது நமக்கும் சவாலாக இருக்கும்அந்த வகையில் இந்திய ஆடுகளங்களின் தன்மையை புரிந்து கொண்டு இந்திய அணிக்கு எதிராக என்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதாலே விக்கெட்டுகள் கிடைத்தது.

அதிலும் குறிப்பாக விராட் கோலி, புஜாரா போன்ற சிறந்த வீரர்களுக்கு எதிராக பந்துவீசும்போது உண்மையிலேயே அது நமக்கு சவாலாகவும்.

திரில்லிங்காகவும் இருக்கும் என நாதன் லயன் கூறியது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மகள் vs பேரன் : நம்பியாரின் பொருட்கள் யாருக்கு?

அப்பளம் பொறிப்பதில் தகராறு: கணவரை கொன்ற பெண்ணுக்கு தண்டனை குறைப்பு!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

2 மாத சிறை வாசம் முடிந்து வெளியே வந்தார் தீஸ்தா சீதல்வாட்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *