INDvsAUS: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் களமிறங்கியது இந்திய அணி.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான மிட்செல் மார்ஷை ட்க் அவுட் ஆக்கி வெளியேற்றினார் பும்ரா.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான வார்னரும், ஸ்டீவன் ஸ்மித்தும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
எனினும் அரைசதத்தை நெருங்கிய நிலையில், வார்னரை(41) குல்தீப் யாதவும், ஸ்மித்தை(46) ஜடேஜாவும் ஆட்டமிழக்க செய்தனர்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இந்த இருவருக்கு பிறகு களமிறங்கிய வீரர்களில் லபுசனே(27) மற்றும் மிட்செல் ஸ்டார்க்(28) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 49.3 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே குவித்த ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆனது.
110 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியா, அடுத்த 89 ரன்களில் 7 விக்கெட்டுகளை பரிதாபமாக இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அஸ்வின், சிராஜ், ஹர்திக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதில் மைதானத்திற்கேற்றவாறு திட்டமிட்டு 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், அந்த கூட்டணி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இஸ்ரேலில் குடும்பத்தினருடன் சிக்கிய இந்திய எம்.பி!
INDvsAUS: மீண்டும் மைதானத்தில் நுழைந்த யூடியுபர் அலப்பறை.. வைரல் வீடியோ!