ICC WorldCup Final : உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (நவம்பர் 19) நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி 3வது முறையாகவும், ஆஸ்திரேலியா அணி 6வது முறையாகவும் கோப்பையை கைப்பற்றவேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கின.
டாஸ் வென்று ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் குவித்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், ஹசேல்வுட், கேப்டன் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் மற்றும் சம்பா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களான வார்னர்(7), மிட்செல் மார்ஸ்(15) மற்றும் ஸ்மித்(4) ஆகியோர் 47 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்தியாவிற்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
ஆனால் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் (137) மற்றும் லபுசனே(58*) இருவரும் 192 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதியை செய்தனர்.
கடைசி கட்டத்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த நிலையில், களமிறங்கிய மேக்ஸ்வெல் வெற்றிக்கு தேவையான 2 ரன்களை அடித்தார்.
இதனால் 43வது ஓவரில் 241 ரன் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.
Congrats Australia… heartbroken as an Indian….but well played team India … pic.twitter.com/K1dsDPDk3G
— Abhisar Sharma (@abhisar_sharma) November 19, 2023
இதன்மூலம் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 1987, 1999, 2003, 2007, 2015 ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா.
மேலும் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் நேற்றே சொன்னது போன்று ’அகமதாபாத் மோடி மைதானத்தில் இருந்த ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் சைலன்டாக்கி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ICC Worldcup Final: அதிரடியாக சதம் கண்ட டிராவிஸ் ஹெட்… தோல்வியின் பிடியில் இந்தியா!
சத்தம் கேட்குதா? : ஆஸ்திரேலியாவை மிரட்டும் ஷமி, பும்ரா… அலறவிடும் ரசிகர்கள்!
சர்ச்சைப் பேச்சு: நடிகர் சங்கத்தில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்?