பாகிஸ்தானை க்ளீன் ஸ்வீப் செய்த ஆஸ்திரேலியா… கண்ணீர் விட்ட வார்னர்!

Published On:

| By christopher

Australia clean sweep Pakistan

Australia clean sweep Pakistan

பாகிஸ்தான் அணியை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி க்ளீன் ஸ்வீப் செய்த நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து இன்று (ஜனவரி 6) ஓய்வு பெற்றார் டேவிட் வார்னர்.

உலகக்கோப்பை தொடரில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணி அதன் பின்னர் முதல் போட்டியாக சொந்த மண்ணில் பாகிஸ்தானை சந்தித்தது.

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 3ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், ஜனவரி 1ஆம் தேதி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலியாவின் 37 வயதான டேவிட் வார்னர்.

இதனை யாருமே எதிர்பார்க்காத நிலையில் கடைசி போட்டியிலும் வென்று, அதனை வார்னருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி கடைசி தொடரில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பாகிஸ்தானை கிளீன் ஸ்வீப் செய்துள்ளது.

கடைசி போட்டியில் அரைசதம்!

குறிப்பாக தனது கடைசி போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர்( 57 ரன்கள்) டெஸ்ட் போட்டியில் தனது 37வது அரைசதத்தை  பதிவு செய்து வெளியேறினார். மைதானத்தில் இருந்து பெவிலியன் சென்ற அவரை மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்களும், கேலரியில் இருந்த ரசிகர்களும் கைதட்டி தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.

போட்டிக்கு பின்னர் தனது ஓய்வு குறித்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வார்னர் பேசியது அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் கண்கலங்க வைத்தது.

பெருமையாக உணர்ந்தேன்!

அவர், ”எனக்கு இது கிட்டத்தட்ட ஒரு கனவு நனவான தருணம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2 வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி, ஆஷஸ் தொடர் டிரா, உலகக் கோப்பை சாம்பியன் அதனைத்தொடர்ந்து இங்கு வந்து 3-0 என வென்றது என்பது சிறப்பான சாதனை தான்.

இந்த நாளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் இருப்பதில் பெருமைப்படுகிறேன். எனது அணி வீரர்கள் வலைகளிலும் உடற்பயிற்சி கூடத்திலும் அயராது உழைக்கிறார்கள். அவர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள். இனி நான் அவர்களை வலைகளில் மீண்டும் சந்திக்க போவதில்லை.

இன்று காலை எழுந்ததும் இங்குள்ள (சிட்னி) உள்ளூர் ஓட்டலுக்கு ஒரு சாதாரண நடைப்பயிற்சி மேற்கொண்டேன். அங்கிருந்த ஒரு இளைஞனுடன் காபி அருந்தினேன். அவர் என்னிடம் காட்டிய அன்பால் அப்போது மகிழ்ச்சியாகவும் உண்மையிலேயே பெருமையாகவும் உணர்ந்தேன்.

Australia clean sweep Pakistan

நன்றி தெரிவித்தாலும் போதாது!

கடந்த பத்தாண்டுகளாக எனக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் ரசிகர்கள் காட்டிய ஆதரவுக்கு நான் வார்த்தைகளால் நன்றி தெரிவித்தாலும் அது நிச்சயம் போதாது. அவர்கள் ஆதரவு இல்லாமல், எங்களால் எதுவும் செய்ய முடியாது. எனது கடைசி டெஸ்ட் போட்டிக்கு பலரும் தங்களது குடும்பத்தினருடன் இங்கு வருகை தந்துள்ளனர். இது மிகவும் பாராட்டத்தக்கது.

நான் டி20 போட்டியுடன் தான் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை  ஆரம்பித்தேன். அதனை தான் நான் எனது பார்மெட்டுகளிலும் பின்பற்றினேன். இன்று நான் அப்படியே விளையாடினேன்.

Australia clean sweep Pakistan

மரணம் வரை நேசிக்கிறேன்!

குடும்பம் தான் நமது வாழ்க்கையின் பெரும்பகுதி. அவர்களின் ஆதரவு இல்லாமல், நீங்கள் செய்வதை உங்களால் செய்ய முடியாது. எனக்கு அழகான மற்றும் சிறந்த குழந்தை பருவத்தை கொடுத்ததற்காக எனது பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். என் சகோதரர் ஸ்டீவ், அவரது அடிச்சுவடுகளை தொடர்ந்து பின்பற்றினேன்.

அதன்பின்னர் என்னுடன் இணைந்தவர் எனது மனைவி கேண்டீஸ். எங்களுக்கு மூன்று மகள்களுடன் ஒரு அழகான குடும்பம் இருக்கிறது. அவர்களுடன் பழகும் ஒவ்வொரு நொடியையும் நான் மதிக்கிறேன். நான் அவர்களை மரணம் வரை நேசிக்கிறேன். நன்றி கேண்டீஸ், நீ தான் எனது உலகம்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று விளையாட உள்ள ஆஸ்திரேலியா அணியில் நான் இல்லாமல் இருப்பது உணர்ச்சிகரமானதாக இருக்கும்.

Australia clean sweep Pakistan

30+ ஆனாலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள்!

நான் முன்பே  குறிப்பிட்டது போல் ஆஸ்திரேலியா அணிக்கு சிறந்த கிரிக்கெட் வீரர்கள் கிடைத்துள்ளனர். அணியில் தற்போது உள்ள பலரும் ஏறக்குறைய 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஆனால் இந்த அணியில் உள்ள அனைவருமே ஆற்றல் மிக்கவர்கள். உலகத் தரம் வாய்ந்த வீரர்கள்.

கடந்த 14 ஆண்டுகளில் நான் விளையாடிய விதத்தால் அனைவரின் முகத்திலும் புன்னகையை ஏற்படுத்தியுள்ளேன் என்று நம்புகிறேன். நமது இளம் வீரர்கள் எனது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். டி20 கிரிக்கெட் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வரை அனைத்திலும் கடினமாக உழைத்து சிறப்பாக விளையாடுங்கள். அனைவருக்கும் நன்றி” என்று வார்னர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஒரே நாளில் மகளிர் உரிமை தொகை + பொங்கல் பரிசு!

கலைஞர் 100 விழா: கிண்டியில் போக்குவரத்து மாற்றம்!

Australia clean sweep Pakistan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel