தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. Australia beat south Africa
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய அரையிறுதி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவம்பர் 16) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்கா அணியில் டி காக், டெம்பா பவுமா களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் டெம்பா பவுமா ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட் கீப்பர் ஜோஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து ஹேசல்வுட் வீசிய பந்தில் பேட் கம்மின்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்களுடன் டி காக் வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் திணறினர். அடுத்தடுத்த களமிறங்கிய ஏய்டன் மார்க்ரம், ரஸ்ஸி வேன் டர் டஸ்ஸன் சொற்ப ரன்களின் விக்கெட்டாகி வெளியேறினர். 14-ஆது ஓவரின் போது 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி திணறியது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி சற்று ஆறுதல் அடைந்தது. ஒருபுறம் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் ஆட்டமிழந்தாலும் டேவிட் மில்லர் பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். 101 ரன்கள் அடித்திருந்தபோது பேட் கம்மின்ஸ் வீசிய பந்துவீச்சில் ட்ராவிஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 49.4 ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை மேற்கொண்டு சீரான வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 7-ஆவது ஓவரில் மாக்ரம் வீசிய பந்துவீச்சில் டேவிட் வார்னர் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் ரபாடா பந்துவீச்சில் வேன் டெர் டஸ்ஸனிடம் கேட்ச் கொடுத்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தென் ஆப்பிரிக்கா அணியிடம் சற்று நம்பிக்கை துளிர்த்தது.
நிதானமான ஆட்டத்தை மேற்கொண்ட ட்ராவிஸ் ஹெட் 48 பந்துகளில் 68 ரன்களுடன் வெளியேறினார். மார்னஸ், மேக்ஸ்வெல் சொற்ப ரன்களுடன் அவுட்டாக ஸ்மித், ஜோஷ் ஜோடி நிதானமான அட்டத்தை தொடர்ந்தனர். ஆஸ்திரேலிய அணி 174 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்மித் கோயட்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மிட்செல் ஸ்டாக், பேட் கம்மின்ஸ் நிதானமாக ஆடினர். இதனால் 47.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 215 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. Australia beat south Africa
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
பன்னீர் மேல்முறையீட்டு வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!