இந்திய அணிக்கு எதிராக இன்று (மார்ச் 17) நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் ஏற்கெனவே 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று தொடர்ச்சியாக 4வது முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது இந்திய அணி
இந்த நிலையில் இரு அணிகளுக்கிடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு சுருண்டது.
அந்த அணியில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 81 ரன்கள் அடித்தார். இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 50 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பேட்டிங்கை தொடங்கியுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிய ரோபோ சங்கர்! என்னாச்சு?
பிச்சைக்காரன் 2 வெளியாவதில் சிக்கல்!