ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, 3 முறை சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இதில் கலந்து கொள்ள உள்ள அணிகள் எல்லாம் சென்னை வந்து விட்டதுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
முதல் நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா அணி ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதனையடுத்து மாலை 6.15 மணிக்கு தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வெர்க்கில் நேரடியாக பார்க்கலாம்.
ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி கடந்த வாரம் ஸ்பெயினில் நடந்த ஹாக்கி தொடரில் ‘நம்பர் ஒன்’ அணியான நெதர்லாந்தை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சென்னை – மதுரை தேஜஸ்: மறு அறிவிப்பு வரும்வரை தாம்பரத்தில் நிற்கும்!