ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி போட்டி சீனாவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இணை மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட், யுவான் யூயன் இணையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் 11-10 , 11-8 என்ற கணக்கில் ரேச்சல் அர்னால்ட் – யுவான் யூயன் இணையை வீழ்த்தி இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தீபிகா பல்லிகல் கணவருமான தினேஷ் கார்த்திக் வாழ்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று(ஜூன் 30) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உங்கள் அற்புதமான முயற்சி மற்றும் உழைப்பிற்கு மீண்டும் ஒரு வெற்றி கிடைத்துள்ளது. வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஊன்று கோல் உதவியுடன் ஆஸ்திரேலிய வீரர்: வைரல் புகைப்படம்!
நான் ராஜினாமா செய்ய மாட்டேன் : மணிப்பூர் முதல்வர்!