ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா விளையாட்டு போட்டியிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இதில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த வீரர் சும்த் அன்டில் 73.29 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
https://twitter.com/SportsArena1234/status/1717007513433124973?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1717007513433124973%7Ctwgr%5Ed816e574baf254e2324b6bfc51ec7805b8e63bcb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fathletics%2Findias-sumit-antil-shatters-javelin-throw-world-record-claims-gold-in-asian-para-games-f64-event-4511007
இதே பிரிவில் இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் 62.06 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இலங்கையின் ஆராச்சிகே சமிதா 62.42 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
தொடர்ந்து பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை பவினா படேல் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
https://twitter.com/Media_SAI/status/1717010458874720639?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1717010458874720639%7Ctwgr%5Ef5ef5c90db59597d00170e3a66574707f0d52369%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fsports%2Fasian-games-2023%2Flive-updates-of-asian-para-games-2023-medal-tally-day-3%2Fliveblog%2F104684691.cms
ஆடவருக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் நாராயண் தாக்கூர் போட்டி தூரத்தை 29.83 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தொடர்ந்து ஆடவருக்கான 200 மீட்டர் டி37 பிரிவில் இந்திய வீரர் ஸ்ரேயான்ஷ் திரிவேதி போட்டி தூரத்தை 25.26 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதுவரை இந்தியா 10 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா