சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் 19வது ஆசிய போட்டிகள் தொடரில், இந்தியா 13 தங்கம் உட்பட 60 பதக்கங்களை வென்று அசத்தி வருகிறது. துப்பாக்கி சுடுதல், தடகள போட்டிகள் என பல பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், ஆடவர் கிரிக்கெட் போட்டிக்கான காலிறுதி ஆட்டங்கள் இன்று துவங்கின. முதல் காலிறுதி ஆட்டத்தில், ருதுராஜ் கெய்க்வாத் தலைமையிலான இந்திய அணி, நேபால் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, களமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால், துவக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்தார். நேபாள் அணி பவுலர்களின் பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்ட ஜெய்ஸ்வால், 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தால், சர்வதேச டி20 போட்டிகளில், தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், மிக குறைந்த வயதில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இவர் இந்த சாதனையை 21 வருடங்கள், 279 நாட்கள் என்ற வயதில் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆசிய போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
இந்த போட்டியில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 204 ரன்களை சேர்த்தது. ஜெய்ஸ்வால் 100 ரன்களும், ரின்கு சிங் 37 ரன்களும் விளாசி இருந்தனர்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குப்பைகளை கொளுத்த வேண்டாம்: விவசாயிகள் கோரிக்கை!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!