2023 ஆம் ஆண்டுக்கான 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23 துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 8 வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில், இந்திய வீரர்கள் தொடர்ந்து அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ஸ்குவாஷ் ஆட்டத்தின் ஆடவர் குழு பிரிவின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.
இந்த இறுதிப்போட்டியின் முதல் ஆட்டத்தில், இந்தியாவின் மகேஷ் மங்கோன்கர் மற்றும் பாகிஸ்தானின் நசிர் இக்பால் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர்.
இந்த போட்டியில், இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நசிர் இக்பால் 11-8, 11-3, 11-2 என நேர் செட் கணக்கில் ஆட்டத்தை வென்றார். இதன்மூலம் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை பெற்றது.
பின், 2வது ஆட்டத்தில் இந்தியாவின் சவுரவ் கோஷல் மற்றும் பாகிஸ்தானின் முகமது ஆசிம் கான் ஆகியோர் மோதிக்கொண்டனர்.
இந்த ஆட்டத்தில், முகமது ஆசிம் கானை 11-5, 11-1, 11-3 என வீழ்த்தி, சவுரவ் கோஷல் இந்தியாவுக்கு அதிரடி திருப்பத்தை கொடுத்தார். இதன்மூலம் 1-1 என ஆட்டம் சமன் அடைந்தது.
Relive another golden moment of #TeamIndia 🤩🥇
Indian Squash Team is the numero-uno 🔥🇮🇳#SonySportsNetwork #AsianGames #Cheer4India #Squash #IssBaar100Paar | @Media_SAI pic.twitter.com/vIdDFaDfKt
— Sony Sports Network (@SonySportsNetwk) September 30, 2023
இதை தொடர்ந்து, வெற்றியை தீர்மானிக்கும் 3வது ஆட்டத்தில் இந்தியாவின் அபே சிங் மற்றும் பாகிஸ்தானின் நூர் ஜமான் ஆகியோர் மோதிக்கொண்டனர்.
இந்த ஆட்டத்தின் முதல் போட்டியில் அபே சிங் 11-7 என வெற்றி பெற்றாலும், அடுத்த 2 போட்டிகளை 11-9, 11-7 என கைப்பற்றி நூர் ஜமான் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
ஆனால், தனது போராட்டத்தை கைவிடாத அபே சிங், அடுத்த 2 போட்டிகளில் 11-9, 12-10 என கைப்பற்றி, பாகிஸ்தானின் நூர் ஜமானை வீழ்த்தினார்.
இதன்மூலம், இந்த இறுதிப்போட்டியை 2-1 என வென்ற இந்திய அணி, தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
முரளி
இன்னும் ரூ.2000 நோட்டுகளை மாற்றவில்லையா? ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!