ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு!

Published On:

| By Monisha

asia cup time table 2023

ஆடவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று (ஜூலை 19) வெளியிட்டுள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முறை ஆசியக் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் ஆசியக் கோப்பையை விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று பிசிசிஐ தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் ஆசியக் கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெற உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் போட்டியில் பங்கேற்க உள்ளன.

இந்த 6 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என்று இரண்டு பிரிவுகளாக பிரிந்து மோத உள்ளன. இதில் லீக் போட்டிகள் முடிவில் 4 அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

செப்டம்பர் 2-ம் தேதி இலங்கையில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மோனிஷா

தக்காளி கிலோ ரூ.70 : மத்திய அரசு!

மகளிர் உரிமைத் தொகை: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel