ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்:தங்கம் வென்ற தமிழக வீரர்கள்!

விளையாட்டு

டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று (நவம்பர் 3 ) தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்றுள்ளார்.

9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.

முன்னதாக மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

இவர் 2015 இல் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும் 2016 ஆம் ஆண்டு உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கத்தையும், 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் 17 வது மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு, சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சென்னையில் செண்டை மேளம் வாசித்த மம்தா

சாட்டையால் அடித்துக்கொண்ட ராகுல் : வைரல் வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *