Asian Champions Trophy: Indian women's hockey team thrashes Thailand!

Asian Champions Trophy : தாய்லாந்தை ஊதித் தள்ளிய இந்திய மகளிர் ஹாக்கி அணி!

விளையாட்டு

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் தாய்லாந்தை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது.

பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் 8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி கடந்த 11ம் தேதி தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் நேற்று (நவம்பர் 14) இரவு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி – தாய்லாந்து அணியுடம் மோதியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் எளிதாக தாய்லாந்தை வீழ்த்தியது.

India vs Thailand LIVE Hockey Score, India vs Thailand Hockey Women's Asian Champions Trophy 2024 LIVE Score: India vs Thailand, Women's Asian Champions Trophy 2024 Match Live in India Latest News Updates

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தீபிகா 5 கோல்களை அடித்து அசத்தினார். அவருடன் பிரீத்தி தூபே, லால்ரெம் சியாமி, மனிஷா சவுகான் ஆகியோர் தலா 2 கோல்களும், பியூட்டி டங் டங், நவ்நீத் கவுர் தலா 1 கோலும் அடித்தனர்.

இந்திய அணி ஏற்கெனவே  தனது முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தென் கொரியாவுடன் நடந்த இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

இதனையடுத்துபலம் வாய்ந்த சீன அணியை இந்திய அணி நாளை சந்திக்க உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஹெல்த் டிப்ஸ்: மாரடைப்பு சார்ந்த மரணங்கள் குளிர்காலங்களில் அதிகமாவது ஏன்?

டாப் 10 நியூஸ் : அரியலூரில் ஸ்டாலின் கள ஆய்வு முதல் INDvsSA கடைசி டி20 போட்டி வரை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *