மலேசியா அணிக்கு எதிரான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய அணி நேற்று (ஆகஸ்ட் 6) இரவு நடைபெற்ற 3 -வது ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மலேசிய அணியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 18-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதேபோல், இரண்டாவது பாதியில் இந்திய அணி வீரர்கள் 4 கோல்கள் அடித்தனர். இதனால் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆனால் ஜப்பான் அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தை போராடி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி.
இதனிடையே , இன்று (ஆகஸ்ட் 7) மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜப்பான் – மலேசியா, 6.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் – சீனா மற்றும் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்திய அணி கொரியா அணியை எதிர்கொள்கிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்