ஹாக்கி: இந்தியா, ஜப்பான் இடையிலான ஆட்டம் டிரா!

Published On:

| By Jegadeesh

Asian Champions Trophy 2023

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில்  நடந்து வருகிறது.

முன்னதாக, முதல் போட்டியில் மலேசிய அணி  சீனாவை 5-1 என வீழ்த்தியது. கொரியா, பாகிஸ்தான் இடையிலான 2-வது போட்டி சமனில் முடிந்தது.

இந்நிலையில், நேற்று(ஆகஸ்ட் 4)  இரவு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.

ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 43-வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. இறுதியில், 1-1 என கணக்கில் போட்டி சமனில் முடிந்தது.

இன்று போட்டிகள் ஏதும் நடைபெறா நிலையில் நாளை (ஆகஸ்ட் 6) மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் சீனா மற்றும் கொரியா அணிகளும், மாலை 6.15 மணிக்கு  பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் அணிகளும், இரவு 8.30 மணிக்கு மலேசிய அணியுடன் இந்திய அணி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அமெரிக்க டைம் ஸ்கொயரில் ’ஜெயிலர்’: ரசிகர்கள் கொண்டாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share