கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கிய 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நாளை (ஆகஸ்ட் 12) நிறைவுபெறுகிறது.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, கொரியா, ஜப்பான் ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்து விட்டன.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
லீக் சுற்றின் முடிவுகளின் படி 13 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்திலும், 12 புள்ளிகளுடன் மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. கொரியா 5 புள்ளிகளுடன் 3 -வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் மலேசிய அணியை நடப்பு சாம்பியனான கொரியா அணி எதிர்கொள்கிறது.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் களம் காண இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: காளான் புலாவ்