ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா

Published On:

| By Jegadeesh

Asian Champions Hockey India in final

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கிய 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டி நாளை  (ஆகஸ்ட் 13) நடைபெறுகிறது.

முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கொரியாவை மலேசியா வீழ்த்தியது.

இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் ஜப்பான் அணியை ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.

Image

அதன்படி,  இடைவேளைக்கு முன் இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் 19-வது நிமிடத்தில் ஒரு கோல், 23-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் மற்றும் 30-வது நிமிடத்தில் மன்தீப் சிங் ஒரு கோல் என அடிக்க இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

Asian Champions Hockey India in final

இதேபோல் இடைவேளைக்கு பின் இந்தியாவின் சுமித் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தி  தலா ஒரு கோல் அடிக்க ஆட்ட நேர முடிவில் இந்தியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.  இச்சூழாலில் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் மலேசிய அணியை எதிர்கொள்கிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கோதுமை ரவா பொங்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel