ஜோர்டானில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
ஆசிய குத்துச்சண்டை தொடரின் இறுதிப்போட்டிகள் இன்று (நவம்பர் 11 ) நடைபெற்றன. இந்த தொடரில் 75 கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான இறுதிப்போட்டியில், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), இன்று உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சொகிபாவை எதிர்கொண்டார்.
போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தனது புத்திசாலித்தனமான நுட்பங்களையும் உத்திகளையும் திறம்பட பயன்படுத்திய லவ்லினா, இறுதியில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இதேபோல், 63 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, ஜப்பான் வீராங்கனை கிடோ மாயை எதிர்கொண்டார்.
இதில் 5-0 என்ற கணக்கில் பர்வீன் ஹூடா வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
52 கிலோ எடைப்பிரிவில் மீனாக்ஷி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இதுதான் எங்கள் கொள்கை: பிரதமர் மோடி
இயக்குநர் ராம்-நிவின் பாலி கூட்டணியின் புதிய அப்டேட்!