ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் இரண்டு தங்கம்!

Published On:

| By Jegadeesh

 

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்றாவது நாளான இன்று இரண்டு இந்திய வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

25 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் நாள் நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கான பதக்க பட்டியலை தொடங்கி வைத்தார்.

இரண்டாவது நாளான நேற்று ஜோதி யர்ராஜி, அப்துல்லா அபூபக்கர், அஜய் குமார் சரோஜ் ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று (ஜூலை 14) இரண்டு இந்திய வீரரகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

Image

அதன்படி, ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் 20.23 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

அதேபோல் பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் பந்தய தூரத்தை 9.38 நிமிடங்களில் கடந்து பரூல் சவுத்ரி தங்கப்பதக்கத்தை வென்றார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: காமராஜர் குறித்து தமிழிசை பகிர்ந்த சுவையான சம்பவம்!

செந்தில்பாலாஜி வழக்கு: மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பின் 10 முக்கிய பாயின்ட்டுகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel