ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

Published On:

| By Jegadeesh

 

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று இந்திய வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

25 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் நாள் நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கான பதிக்க பட்டியலை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இன்று(ஜூலை 13) நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோதி யர்ராஜி, அப்துல்லா அபூபக்கர், அஜய் குமார் சரோஜ் ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

அதன்படி, பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 13.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

Image

ஜோதி யர்ராஜி

அவருக்கு அடுத்தபடியாக ஜப்பானிய ஓட்டப்பந்தய வீராங்கனைகளான அசுகா தெரடா (13.13 வினாடிகள்) மற்றும் அயோகி மசுமி (13.26 வினாடிகள்) இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

Image

அஜய் குமார் சரோஜ்

அதேநேரம் மற்றொரு இந்திய வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்தா நித்யா ராம்ராஜ் 13.55 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து நான்காவது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

Image

அப்துல்லா அபூபக்கர்

இதனிடையே, ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜய் குமார் சரோஜ் தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும், ஜப்பானின் யூசுகே தகஹாஷி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினர்.

மும்முறை தாண்டுதலில் (16.59 மீட்டர்) அப்துல்லா அபூபக்கர் தங்கப்பதக்கத்தையும், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ராவும், தேஜஸ்வின் சங்கரும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம்: முதல்வர் அறிவிப்பு!

ஆட்சியர்களுடன் உதயநிதி ஆலோசனை : ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel