ஆசிய U 20 தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியா

விளையாட்டு

ஆசிய U 20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ரெசோனா மல்லிக் ஹீனா மற்றும் பாரத்ப்ரீத் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

தென்கொரியாவில் உள்ள யெச்சியோனில் ஆசிய U 20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில், பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் 53.31 வினாடிகளில் ஓடி இந்தியாவின் ரெசோனா மல்லிக் ஹீனா இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதே போன்று ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் பாரத்ப்ரீத் சிங் 55.66 மீ எறிந்து இந்தியாவிற்கு 2ஆவது தங்கம் வென்றார்.

பெண்களுக்கான 5000 மீ தடகள போட்டியில் இந்தியாவின் அந்திமா பால் வெண்கலம் வென்றுள்ளார்.

5000 மீ தடகள போட்டியில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். அவர் 17 நிமிடங்கள் 17.11 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

புஷ்ரா கான் கௌரி 18 நிமிடங்கள் 15.98 வினாடிகளில் கடந்து 5ஆவது இடம் பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற யோனேசவா நானகா மற்றும் மட்சுமோட்டோ அகாரி ஆகியோர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நாளை( ஜூன் 5) ஆம் தேதி நடைபெறும் ஆண்களுக்கான 800 மீட்டர் தடகளப் போட்டியில் ஷியாம் மிலன் பிண்ட் மற்றும் ஷ்கீல் க்யூ ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதே போன்று பெண்களுக்கான இறுதிப் போட்டியில் அபிநயா ராஜராஜன் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“6 பேரை தொடர்புகொள்ள முயற்சி” : உதயநிதி

ரயில் விபத்து – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை : ரயில்வே அமைச்சர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *