ஆசியக் கோப்பை பெண்கள் டி20: இந்திய அணி வெற்றி
வங்காளதேசத்தில் ஏழு அணிகள் பங்கேற்று விளையாடும் ஆசியக் கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி இன்று (அக்டோபர் 1 ) தொடங்கியது.
இந்த தொடரில் இன்று (அக்டோபர் 1 ) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கி விளையாடிய இந்திய பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 33 ரன் எடுத்தனர்.
![Asia cup womens t20 India win](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/Fd-S5nKXkAU0_u0-1024x682.jpg)
பின்னர் விளையாடிய இலங்கை பெண்கள் அணி 18.2 ஓவர் முடிவில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஹர்ஷித 26 ரன்னும், ஹாசினி பெரேரா 30 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
![Asia cup womens t20 India win](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/Fd-oRkSaEAAgS4O-1024x682.jpg)
இந்திய பந்துவீச்சாளர்களான ஹேமலதா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து இந்திய பெண்கள் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டி20 உலக கோப்பையில் பும்ரா விளையாடுவாரா? கங்குலி புது ட்விஸ்ட்!
மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி!