மகளிர் ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மகளிர் ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து பாங்காக் நகரில் நேற்று (நவம்பர் 18) தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று (நவம்பர் 18) நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 44-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சென் சூ யு-வை எதிர் கொண்டார்.

மனிகா பத்ரா 8-11, 11-9, 11-6, 11-6, 9-11, 8-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதுமட்டுமின்றி மகளிர் ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் ஒரு இந்திய வீராங்கனை அரையிறுதிக்குள் நுழைவது இது முதல் முறையாகும்.
தொடர்ந்து இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், 3 முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்ற ஜப்பானின் ஹினா ஹயாடாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 4-2 என்ற செட் கணக்கில் மனிக்கா பத்ரா ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
மகளிர் ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி வரலாற்றில் இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும். இதன்மூலம் டேபிள் டென்னிஸ் சாம்ராஜ்ஜியத்திற்குள் இந்தியாவின் பெயரை எடுத்துச் சென்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றுள்ளார்.
மோனிஷா
காசி தமிழ் சங்கமம்: வேஷ்டி சட்டையில் பிரதமர் மோடி
பறிக்கப்படும் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி?