ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று (செப்டம்பர் 4) முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து பாகிஸ்தானுக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்று நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இணை முதல் விக்கெட்டுக்கு 5.1 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்தனர்.
அதிரடியாகத் தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் எடுத்த நிலையில் 28 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார்.
அடுத்த ஓவரிலேயே தொடக்க வீரர் கே.எல். ராகுல் 28 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனைத் தொடர்ந்து சூர்ய குமார் யாதவ் களமிறங்கினார். இரண்டு பவுண்டரிகள் எடுத்த நிலையில் 13 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் 13 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இறுதிவரை நிதானமாக விளையாடிய விராட் கோலி இந்த தொடரில் தொடர்ச்சியாக 2வது அரைசதத்தை பதிவு செய்தார்.
கடைசி ஓவரில் 60 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கி பிஷ்னோய் கடைசி இரு பந்துகளில் பவுண்டரி அடித்த நிலையில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் குவித்தது.
மோனிஷா
ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதல்!