நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி இருபது ஓவர் தொடரை இழந்தது.
இச்சூழலில் பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அதன்படி, 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாட உள்ளது. அதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது.
இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் வீரர்கள் தான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் பின்னர் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்பார்கள்.
இதனிடையே ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில்,
சமூக வலைதளம் மூலமாக வீடியோ கான்பரன்ஸ்ங்கில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டில், எம்.எஸ்.கே பிரசாத் ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு தற்போது இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது.
அதன் படி அவர்கள் தேர்வு செய்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:
சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ரவீந்திர ஜடேஜா,
அக்சர் படேல், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேநேரம் கே.எல்.ராகுல் இந்த அணியில் இடம் பெறவில்லை.
முன்னதாக இவர் ஐபிஎல் போட்டியின் போது தொடையில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்த இவர் கடந்த சில நாட்களாக மீண்டும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சமூக நீதி காத்த தகைசால் தமிழர்!
இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தகவல்!