ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று (ஆகஸ்ட் 28 ) விளையாடி வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள்.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 15 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் 10 ஓவர் முடிவில் 68 ரன்களை எடுத்த பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தது.

அணியின் ஸ்கோர் 87 ரன்னாக இருந்தபோது இப்திகார் 28 ரன்களில் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் வெளியேறினார். மறுபுறம் நிதானமாக ஆடி வந்த ரிஷ்வான் 43 ரன்களில் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த குஷ்தில் ஷா பாண்டியா வீசிய அதே ஓவரில் 2 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் பாகிஸ்தான் அணி ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறியது.அடுத்து வந்த வீரர்கள் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர்
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 147 ரன்களில் சுருண்டது.
இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது
மு.வா.ஜெகதீஸ் குமார்
டி20 தோல்விக்கு பதிலடி: இந்தியா-பாகிஸ்தான் போட்டி பற்றி ராகுல்