ஆசியக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் பாண்டியா
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் – 4 சுற்றில் இன்று (செப்டம்பர் 4) நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அமீரகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது.
லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிப்பெற்றன.
இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
அதன்படி நேற்று நடந்த ‘சூப்பர் – 4’ சுற்றின் முதல் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.
அதனைத் தொட்ர்ந்து சூப்பர்-4′ சுற்றின் 2ஆவது போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஆவேஷ் கான் ஆகியோருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக முகமது ஹஸ்னைன் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
டி20 உலகக் கோப்பையில் இருந்தும் ஜடேஜா விலகல்?