ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதல்!

விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும், ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத இருப்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆறு அணிகள் பங்கேற்றுள்ள 15வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கியது.

இதில் நேற்று (செப்டம்பர் 2) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, பலவீனமான ஹாங்காங் அணியை 38 ரன்களுக்குள் சுருட்டி, 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதையடுத்து, ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்றுடன் (செப்டம்பர் 2) லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று (செப்டம்பர் 3) முதல் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அதேநேரத்தில், இந்திய அணி நாளை (செப்டம்பர் 4) மீண்டும் பாகிஸ்தானுடன் மோத இருக்கிறது. இதனால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதி புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை மீண்டும் மோத இருக்கின்றன்.

இதில் இந்திய அணி, லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை வென்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி முதல் இடத்தைப் பிடித்தது.

பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோற்று, ஹாங்காங்கை வென்று இரண்டாம் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்குள் வந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவிய ஹாங்காங், இந்தத் தொடரில் இருந்து வெளியேறியது. லீக் சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

அந்தப் போட்டியின், இறுதி ஓவரில், 3 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அப்போது ஹர்திக் பாண்டியா லாங்-ஆன் திசையில் சிக்ஸர் விளாசி வெற்றியை வசப்படுத்தினார். சிக்ஸர் அடித்து பாகிஸ்தானை வென்றதன் மூலம் ரசிகர்கள் உற்சாகத்துக்குள்ளானார்கள்.

இதன்மூலம் கடந்த ஆண்டு (2021) பாகிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டிருந்த இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் பழிதீர்த்துக்கொண்டது.

இந்நிலையில், நாளை சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத இருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.பிரகாஷ்

ஹாங்காங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *