‘என்ன ஒரு த்ரில்லரான ஆட்டம்’ : இந்திய அணிக்கு குவியும் பாராட்டுகள்!

Published On:

| By Monisha

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணிக்குத் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

துபாயில் நேற்று (ஆகஸ்ட் 28) இரவு நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 ஒவர் கிரிக்கெட் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய -பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆட்டத்தைத் தொடங்கியது. இந்திய அணி 148 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

“என்ன ஒரு த்ரில்லரான ஆட்டம், நன்றாக விளையாடினீர்கள். விளையாட்டின் அழகு என்னவென்றால், அது நாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் ஒன்றிணைக்கிறது. மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமையடைகிறேன்”.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி

“சிறப்பான நாளில் சிறப்பான வெற்றி” என்று இந்திய அணியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் இந்திய வீரர்களின் ஆட்டத்திற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ”பரம போட்டியாளர்களுக்கு எதிரான இந்த போட்டியில் நமது இந்திய அணிக்கு என்ன ஒரு வெற்றி, ஆசிய கோப்பையில் சிறப்பான தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்.” என்று ட்விட் செய்துள்ளார்.

தற்போது, #asiacup2022 என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரண்ட் செய்து வருகின்றனர்.

மோனிஷா

தேசியக்கொடியை அவமதித்தாரா அமித்ஷா மகன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel