ஆசிய கோப்பை : வரலாற்று வெற்றியை பெறுமா இந்தியா?

விளையாட்டு

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் தனது இரண்டாவது ஆட்டத்தில் விளையாட உள்ள இந்திய அணி இன்று (செப்டம்பர் 6) இலங்கையை எதிர்கொள்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இலங்கையை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் அபாரமாக விளையாடி, சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் தோல்வி கண்டு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி நல்ல பார்மில் உள்ளனர். அதேவேளையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சறுக்கிய ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சாஹல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகியதை தொடர்ந்து அணித் தேர்வு முறையில் குழப்பம் நிலவுகிறது.

இந்த குறைபாடுகளை சரி செய்து இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக வென்றால் மட்டுமே இறுதிபோட்டிக்கு இந்திய அணி செல்ல முடியும்.

நெட் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா வெறும் -0.126 என்ற கணக்கில் உள்ள நிலையில், இலங்கை அணி +0.589 மற்றும் பாகிஸ்தான் அணி +0.126 ரன் ரேட்டையும் கொண்டு முன்னிலையில் உள்ளன.

எனவே இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவது முக்கியமானது.

துபாய் சர்வதேச மைதானத்தில் 2-வது பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றி பெறுவதால், திறமையை காட்டிலும் ‘டாஸ்’ தான் முக்கிய பங்கு வகிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி நிலவரம்!

அதேவேளையில் லீக் சுற்றில் தட்டு தடுமாறிய இலங்கை அணி, சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை வென்ற நிலையில் நம்பிக்கையுடன் இந்தியாவை இன்று சந்திக்கிறது.

அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஷனகா, குசல் மென்டிஸ், பானுகா ராஜபக்சே, பந்து வீச்சில் ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்‌ஷனா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் அடுத்ததாக வலிமையான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. எனவே இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டி இலங்கைக்கு முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

வரலாற்றை மாற்றுமா இந்தியா?

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

ஆசிய கோப்பை டி20 தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ள நிலையில், இலங்கை அணியே வெற்றி பெற்ற்றுள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டு தொடரில் முதன்முறையாக இலங்கையை சந்திக்கும் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆசிய கோப்பை: ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்தியா!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *