2025-ம் ஆண்டுக்கான ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
ஆசிய கண்டத்துக்குள் உள்ள நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த தொடர் 17-வது முறையாக நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அமீரகம், ஓமன், ஹாங்காங், பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன.இது அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இந்த முறை 50 ஓவர் போட்டியாக அல்லாமல் டி20 போட்டியாக நடத்தப்படவுள்ளது.
இந்தியாவில்தான் இந்த தொடர் நடப்பதாக இருக்தது. ஆனால் , சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல மறுத்ததால், அந்த அணியும் இந்தியா வந்து விளையாட மறுத்து வருகிறது. இந்தியா பாகிஸ்தான் நாடுகள் மோதலில் ஈடுபடுவதால், பொதுவான இடத்தில் ஆசியக் கோப்பையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. asia Cup could be held in UAE
2028 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் எந்த முக்கிய தொடர்களில் பங்கேற்கவும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பயணம் செய்யாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. asia Cup could be held in UAE
கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஆசியா கோப்பையின் போது, பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல மறுத்தது. இதனால், அந்த தொடர் ஒருநாள் சர்வதேச போட்டியாக மாற்றி நடத்தப்பட்டது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெற்றது.