Asia Cup 2023 Final: ஒரே ஓவரில் 4 விக்கெட்.. ‘முகமது சிராஜ்’ புதிய சாதனை!

விளையாட்டு

இலங்கையின் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில், 2023 ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

கடந்த போட்டியில் வழங்கப்பட்ட ஓய்வுக்கு பிறகு, விராட் கோலி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்கு திரும்பினர். அக்சர் பட்டேலுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கும் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு, யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியை முகமது சிராஜ் அளித்துள்ளார்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே குஷல் பெரேரா விக்கெட்டை பும்ரா வீழ்த்திய நிலையில், 4வது ஓவரை வீச வந்த முகமது சிராஜ், ஒரே ஓவரில் பதும் நிசங்கா, சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா என 4 பேரின் விக்கெட்களை வீழ்த்தி, இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தை அளித்துள்ளார். இதன்மூலம், சர்வதேச போட்டிகளில் ஒரே ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் சிராஜ் பெற்றுள்ளார்.

மீண்டும் 6வது ஓவரை வீச வந்த சிராஜ், இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவின் விக்கெட்டையும் வீழ்த்தி, போட்டி துவங்கிய 15 நிமிடங்களுக்குள்ளேயே 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதன்மூலம், வெறும் 12 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ள இலங்கை அணி, மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகிறது.

முரளி 

பிரதமர் மோடியின் பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து!

அண்ணாமலை vs சி.வி. சண்முகம்: அதிமுக-பாஜக கூட்டணியில் மீண்டும் விரிசல்! 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *