வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இந்த தொடர் நடக்கிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார். இதைத்தொடர்ந்து 2வது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பல சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் இதுவரை தன்னுடைய கேரியரில் டெஸ்ட் போட்டிகளின் 4வது இன்னிங்ஸில் 99 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எனவே கான்பூர் போட்டியில் 4வது இன்னிங்ஸில் இன்னும் ஒரு விக்கெட் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 37 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கான்பூர் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
தற்போது, ஷேன் வார்னேவுடன் இந்த சாதனையை அஸ்வின் பகிர்ந்து வருகிறார். இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் 67 முறை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
இது போக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அஸ்வின் 180 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கான்பூர் போட்டியில் இன்னும் 8 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது, இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா வீரர் நேதன் லயன் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஹெச்.டி.எப்.சி வங்கியில் சேரில் இருந்து விழுந்து பெண் ஊழியர் பலி… வேலை அழுத்தம் காரணமா?
தென் தமிழகத்தில் மழை பெய்யுமா? வெயில் வாட்டுமா?