இலங்கை உடனான டி20 போட்டியின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை இந்தியவீரர் அஷ்வின் பாராட்டியுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை வடிவமைத்து தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட வைத்து பிசிசிஐ தீவிரமான ஒரு முயற்சியை துவங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தற்போது ஹர்திக் பாண்டியா அணியின் கேப்டனாக செயல்படுவது மட்டுமின்றி எதிர்கால கேப்டனாக அவரே நியமிக்கப்படலாம் என்பதற்காக அவரது கேப்டன்ஷிப்பும் இந்த தொடரில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் , இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் “ஹர்திக் பாண்டியா குறுகிய காலத்திலேயே ஒரு கேப்டனாக வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.
ஏனெனில் மைதானத்தில் மிகவும் கூலாக இருக்கும் அவர் அணியை எப்பொழுதுமே நிதானமாக வழிநடத்தி செல்கிறார்.
அதுமட்டும் இன்றி போட்டியில் அடுத்தடுத்து என்ன நடைபெறும் என்பதை யோசித்து செயல்படும் அவர் புத்திசாலித்தனமான வீரராகவும் இருக்கிறார்.
ஒரு கேப்டன் என்பவர் அணியை ஒரு குழுவாக அழைத்துச் சென்று சிறப்பாக செயல்பட வைப்பது முக்கியம். அந்த வகையில் பாண்டியா மிக அற்புதமாக கேப்டன்சி செய்து வருகிறார்” என்று தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
மேலும் , கபில்தேவுடன் அவரை ஒப்பிடுவது பற்றி பேசியிருந்த அஷ்வின் கூறுகையில் : கபில்தேவ் ஒரு சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல உலகம் கண்ட மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர்.
என்னை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் சிறந்து விளங்குவார்கள். அந்த வகையில் தற்போது பாண்டியா சிறந்த வீரராக இருக்கலாம் என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சிரிக்காமல் போட்டோ எடுத்து கொண்ட செல்ஃபிபுள்ள சமந்தா
டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தல்- ஸ்டாலினுக்கு இரண்டு பரிட்சை!