இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால தூணாக குல்தீப் யாதவ் இருப்பார் என்று ரவிச்சந்தர் அஷ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்திரியால் இந்தியாவின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளராக அடையாளம் காணப்பட்ட குல்தீப் யாதவ், கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
குல்தீப் படிப்படியாக சிறப்பான பந்துவீச்சில் ஈடுபட்டாலும், அவருக்கு இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், குல்தீப் யாதவ் மீது தான் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருப்பதாக ரவிச்சந்தர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
குல்தீப் யாதவ் குறித்து ரவிச்சந்தர் அஷ்வின் தனது யூடியுப் சேனலில் பேசும்போது, ”ரிஸ்ட் ஸ்பின்னர்கள் வரிசையில் குல்தீப் எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
அவரிடம் அபூர்வமான திறமை உள்ளது. நினைத்த இடத்தில் அவரால் பந்தை சரியாக வீச முடியும். குல்தீப்பின் இந்த திறமை தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய பலன்களை இந்திய அணிக்கு தரப்போகிறது.
அனைத்து விதமான போட்டிகளிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்களால் நினைத்த இடத்தில் பந்தை வீச முடியாது. ஆனால் குல்தீப் இந்த அற்புதமான திறமையை பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால தூணாக குல்தீப் இருப்பார் என நம்புகிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
குல்தீப் யாதவ் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேற்று நடைபெற்ற இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் 2022-ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை.
இருப்பினும் 2023ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம்பெற குல்தீப் யாதவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
செல்வம்
மூன்று வேடங்களில் நடிக்கும் டொவினோ தாமஸ்
‘நீங்கள் ஒரு தேவதை’ : ஆட்சியருக்கு ஐஸ் வைத்து லீவ் கேட்ட மாணவர்கள்!