ராஜ்கோட் டெஸ்ட் : மீண்டும் அணியில் இணைந்தார் அஸ்வின்

விளையாட்டு

INDvsENG 3rd Test  : தனது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய 48 மணி நேரத்திற்குள் மீண்டும் இந்திய அணியில் பந்துவீச்சாளர் அஸ்வின் இன்று (பிப்ரவரி 18) இணைந்துள்ளார்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் கடந்த 15ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் க்ராலியை அவுட் செய்து தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை நிறைவு செய்தார் அஸ்வின்.

மேலும் டெஸ்டில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

எனினும் சிறிது நேரத்தில் அவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து போட்டியில் இருந்து விலகி சென்னை திரும்பினார்.

இதற்கிடையே நேற்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

இன்று தொடங்கிய 4ஆம் நாள் ஆட்டத்தில் இதுவரை 4 விக்கெட்டுக்கு 313 ரன்களுடன் இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் போட்டியில் இருந்து விலகிய வீரர் அஸ்வின் மீண்டும் இந்திய அணியுடன் இன்று இணைந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்டின் 2வது நாளுக்குப் பிறகு, குடும்ப அவசரநிலை கருதி பந்துவீச்சாளர் அஸ்வின் அணியில் இருந்து தற்காலிகமாக விலக வேண்டியிருந்தது.

எனினும் தற்போது அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

அஷ்வின் 4வது நாளான இன்று அவர் மீண்டும் களமிறங்குவார் என்பதையும், நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் தொடர்ந்து பங்களிப்பார் என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தவெக ஆலோசனைக் கூட்டம் : விஜய் பங்கேற்கிறாரா?

பெர்லினில் ’கொட்டுக்காளி’ : சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சூரி

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *