சாதனை மேல் சாதனை: குஷியில் அஸ்வின்

விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் தமிழக வீரர் அஸ்வின் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று ( பிப்ரவரி 17 ) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர் 15 ரன்களில் முகமது சமி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் மதிய உணவு இடைவெளிக்கு முன் அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுக்கப்பட்டது. இதில் ஸ்மித் டக் அவுட் ஆகியும் மார்னஸ் லாபஸ்சேன் 18 ரன்களிலும் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினர்.

இதேபோன்று விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் அஸ்வின் பந்தில் டக்அவுட் ஆகினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

இதேபோன்று மற்றொரு சாதனையும் அஸ்வின் படைத்திருக்கிறார். அதன் படி, உள்ளூர் மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அடங்கிய முதல் தர கிரிக்கெட்டில் மொத்தமாக 700 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சர்ச்சை பேச்சால் சிக்கிய சேத்தன் சர்மா ராஜினாமா!

வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!

+1
1
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *