‘டேய் பைத்தியம் ‘- ரோகித் ரசிகரை வறுத்த அஸ்வின்

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. 3வது டெஸ்ட் முடிந்த உடனே அஸ்வின் ஓய்வு அறிவித்தார். தொடர்ந்து, அடுத்த நாளே தாய்நாடும் திரும்பி விட்டார்.

அஸ்வின் திடீரென்று ஓய்வு அறிவித்தது, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் வளர்ந்து வருவதால், அஸ்வினே முன் வந்து ஓய்வு அறிவித்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில், அஸ்வினுக்கு நேற்று பத்மஶ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, அஸ்வினுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்படி, வாழ்த்து தெரிவித்து நடிகர் தனுஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவுக்கு அஸ்வின் நன்றி தெரிவித்தார்.

இந்த சமயத்தில், ரோஹித் சர்மா ரசிகர் ஒருவர், அதே எக்ஸ் பதிவு கமெண்டில், ‘‘ரோகித் சர்மாவுக்குதான் அஸ்வின் நன்றிசொல்ல வேண்டும். ரோஹித் சர்மாதான் அஸ்வினுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தார்’’ எனப் பதிவிட்டார்.

இதற்கு ரிப்ளே செய்துள்ள அஸ்வின், ‘’டேய் பைத்தியம்’’ என காட்டமாக கூறியுள்ளார்.

அஸ்வின் இப்படி திட்டியது சரிதான். அஸ்வின் தனது உழைப்பால் முன்னேறி இருக்கிறார். அந்த வெற்றிக்கு வேறு ஒருவரை எப்படி காரணமாக சொல்ல முடியும்? எனக் கூறி, அந்த ரசிகரை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel