இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான அஸ்வின், தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். முன்னதாக அறிவிக்கப்பட்ட 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அஸ்வின் இடம்பெறாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆசியக்கோப்பை வெற்றிக்கு பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து மனம் திறந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா,
“இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீசக்கூடிய ஆல்-ரவுண்டர்களை தேடி வருகிறது. அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்றோருக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. நான் இது குறித்து அஸ்வினிடம் தினமும் தொலைபேசியில் பேசி வருகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
தற்போது, இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ஆசிய கோப்பை தொடரில் காயமடைந்த அக்சர் பட்டேல் ஆகியோருக்கு ஒய்வு வழங்கப்பட்டுள்ளது.
இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.
முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி
கே.எல்.ராகுல் (c) (wk), ரவீந்திர ஜடேஜா (vc), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (wk), ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
3வது போட்டிக்கான இந்திய அணி
ரோகித் சர்மா (c), ஹர்திக் பாண்டியா (vc), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (wk), இஷான் கிஷன் (wk), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.
Coming 🆙 next 👉 #INDvAUS
Here are the #TeamIndia squads for the IDFC First Bank three-match ODI series against Australia 🙌 pic.twitter.com/Jl7bLEz2tK
— BCCI (@BCCI) September 18, 2023
இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் எப்போது?
முதல் போட்டி – செப்டம்பர் 22 (மொஹாலி)
2வது போட்டி – செப்டம்பர் 24 (இந்தூர்)
3வது போட்டி – செப்டம்பர் 27 (ராஜ்கோட்)
2023 ஒருநாள் உலகக்கோப்பை அக்டோபர் 5 அன்று துவங்கவுள்ள நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் அக்டோபர் 8 அன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முரளி
கொலை முயற்சி வழக்கில் டிடிஎஃப் வாசன் கைது!
மகளிர் உரிமைத் திட்டம்: இன்று முதல் உதவி மையங்கள்!