மெல்போர்னில் இன்று (ஜனவரி 28) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் வென்று பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான இதில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்வதற்காக டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி மெல்போர்ன் ரோட் லேவர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ச்த எலெனா ரைபகினா மற்றும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அரினா சபலெங்கா ஆகியோர் மோதினர்.
முதல் செட்டில் 4-6 என்ற பின் தங்கிய சபலெங்கா, அடுத்தடுத்த சுற்றுகளில் தனது ஆக்ரோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெற்றியை தன்பக்கம் சாய்த்தார்.
சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றார் 24 வயதான அரினா சபலெங்கா.
ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சபலெங்கா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு இதே ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் சபலெங்கா இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தனது முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றியுடன் மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் தரவரிசையில் 5வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் சபலெங்கா.
கிறிஸ்டோபர் ஜெமா
விமான கண்காட்சியை முன்னிட்டு 5 நாட்கள் இறைச்சி விற்க தடை!
பிச்சை தான் எடுக்கனும்: மதுரை முத்து ஆவேசம்!