தென் ஆப்பிரிக்க அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அது இந்திய அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில், முதலாவது 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர் 28 ) நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.
இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணிக்கு 107 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா, ரோசோ, டேவிட் மில்லர், ஸ்டப்ஸ் ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். 2வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
மார்க்ராம் 25 ரன்களும், பார்னெல் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 41 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்க அணி 106 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், தீபக் சாகர், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
எனக்கு பயம் கிடையாது: ஊடகத்தினரை எச்சரிக்கும் டிடிஎஃப் வாசன்