22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி கைப்பற்றியது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் அர்ஜென்டினா அணியும் பிரான்ஸ் அணியும் களம் இறங்கியது.
பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினார்கள்.
ஆட்டத்தின் 23 வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி முதல் கோலை அடித்தார். இதனால் அர்ஜென்டினா வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
இதனைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டத்தை அதிகப்படுத்தியது.
இதற்கு பலனாக ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் டி மரியா தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் இடையே அனல் பறந்தது.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே, ஆட்டத்தின் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் தனது அணிக்கான அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து போட்டியை சமன் செய்து அசத்தினார்.
போட்டி சமன் ஆனதால் ஆட்டத்தின் போக்கு கடுமையாக இருந்தது. இரு அணி வீரர்களும் கூடுதல் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.
90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.
மு.வா.ஜெகதீஸ் குமார்
21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு மகுடம்!
Your score is wrong match 3-3 before penalty kick