திக் திக் நொடிகள்..மெஸ்ஸி மேஜிக்கால் வாகைசூடிய அர்ஜென்டினா!

விளையாட்டு

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

காலிறுதியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி மைதானத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடியது.

இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி முக்கிய வீரர் டீ மரியாவை களமிறக்கவில்லை.ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

Argentina won by Messi Magic

ஆனால் அர்ஜென்டினா அணியின் பலத்தை கணித்து ஆஸ்திரேலியா அணியின் அனைத்து வீரர்களும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அர்ஜென்டினா அணி கோல் அடிக்க முடியாமல் திணறியது.

ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். 77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் என்சோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கத்தாரில் திராவிட மாடல்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.