ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி இரண்டாவது கோலை பதிவு செய்து முன்னிலையில் உள்ளது.
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மல்லுக்கட்டுகின்றன.
உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதி யுத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும். இந்த போட்டி இரவு 8.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் 21வது நிமிடத்தில் முதல் கோலை மெஸ்ஸி அடித்தார்.
தொடர்ந்து 36வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் டி மரியா கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்தியாவில் உலகக்கோப்பை கால்பந்து: பிரதமர் மோடி