சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் இன்று (நவம்பர் 11) சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சென்னை கிராண்ட் மாஸ்டர் 2-ஆவது சீசன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளில் போட்டியானது நடைபெற்றது.
இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் மற்றும் அமெரிக்க வீரர் லெவோன் அரோனியன் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது.
டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற இப்போட்டியில், அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அரவிந்த் சிதம்பரத்திற்கு ரூ.15 லட்சமும், பிரணவிற்கு ரூ.6 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் சிதம்பரம், “முதல்முறையாக நான் கிராண்ட் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றிருக்கிறேன். இந்த வெற்றியை நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். தமிழக அரசு இந்த போட்டியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள். எந்தக் குறையும் இல்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக நகர செயலாளர் + சேர்மேன் மீது பாய்ந்த எஸ்.சி / எஸ்.டி வழக்கு!
திறமைக்கு பொருளாதாரம் தடையாக இருக்க கூடாது… மாணவர்களுக்கு உதயநிதி குட் நியூஸ்!