”12 ஆண்டுகளுக்கு முன்பு… நீங்கள்?”: சச்சின் கேட்ட கேள்வி!

விளையாட்டு

2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்றதை கிரிக்கெட் வீரர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

ஏப்ரல் 2, 2011, இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு ”கோல்டன் டே” என்று தான் சொல்ல வேண்டும். அன்று இலங்கைக்கு எதிராக தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது.

2011 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி சொந்த மண்ணில் நடைபெற்றது. ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு மும்பை நகரமே தூங்காமல் விழித்திருந்தது. இந்திய அணியின் நீல நிற ஜெர்சியுடன் ரசிகர்கள் வெள்ளத்தில் கடல் போல் காட்சியளித்தது வான்கடே கிரிக்கெட் மைதானம்.

அன்று ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றி 1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி தனது 2வது உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதனை ரசிகர்கள் கொண்டாடினர்.

இன்றுடன் இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றி 12 ஆண்டுகள் ஆகிறது. இதனை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே நினைவுகூர்ந்து கொண்டாடி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ட்விட்டர் பக்கத்தில், 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற புகைப்படத்தைப் பதிவிட்டு, “12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உலகக் கோப்பையைத் தூக்கியது. என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்.

இந்த நிகழ்வு நடந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள். எப்படி கொண்டாடினீர்கள்?” என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் அவர்களது பதில்களை கருத்துக்களாகப் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு ரசிகர், “நான் அன்று பள்ளிக்கே செல்லவில்லை” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “நான் அன்று என் குடும்பத்துடன் மைதானத்தில் இருந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர், “2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ப்ரித்வி ஷாவும் அர்ஜுன் டெண்டுல்கரும் வான்கடே மைதானத்தில் இருந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

போட்டியின் போது வான்கடே மைதானத்தைக் கடந்து செல்ல முடியாத ஒருவர், “அப்போது நான் மும்பை வான்கடே மைதானத்தில் இருந்தேன்.

நான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ள ஹோட்டல் IBIS இல் வில்லே பார்லேயில் தங்கியிருந்தேன், இரவு முழுவதும் என்னால்ஹோட்டலை அடைய முடியவில்லை.

நான் எனது இரவை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் இரவு முழுவதும் மக்களின் பைத்தியக்காரத்தனத்தைப் பார்த்துக் கொண்டே கழித்தேன்” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு பலரும் அவர்களது கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மோனிஷா

நாடாளுமன்ற தேர்தல்: “9 தொகுதிகளுக்கு டார்கெட்”: எல்.முருகன்

ஜி20 கூட்டம்: சிங்கப்பூர் அதிகாரி நடனம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *